ஆண்டுக்கு ₹40 லட்சம் சம்பாதித்தாலும், தம்மால் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்க முடியவில்லை என்று ஐடி பொறியாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாட்ஃபார்ம் X-இல் பகிரப்பட்ட இந்த உரையாடலில், அந்தப் பொறியாளர் தனது வருமானம் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாகவும், வேலையை அடிக்கடி மாற்றியதால் தொழில் ரீதியான வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
தமக்குத் தெரிந்த சக ஊழியர்கள் தமக்கு நிகராகவோ அல்லது தமக்கு மேல் ₹70 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பதையும் சுட்டிக்காட்டி, தாம் இன்னும் ஏழை போலவே உணர்வதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் இணையத்தில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டாலும், பலர் இது வருமானம் சார்ந்த பிரச்சனையல்ல, மாறாக மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலைதான் காரணம் என்று வாதிடுகின்றனர்.
அதே சமயம், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சொத்துக்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அதிக வருமானம் ஈட்டும் நபர்களுக்கும் சொந்த வீடு வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Was speaking to a friend from my engg college (NIT).
Dekho in logo ko. 40 LPA pe bhi itna rote h. (IT sector me h ofc).
Khair… pic.twitter.com/S8oMXbSnXO
— W (@sone_do_mujhe) June 18, 2026
“>
நிஜத்தில், வாழ்க்கை முறை மீதான எதிர்பார்ப்புகளும், இன்றைய பொருளாதாரச் சூழலும் இளம் தொழில் வல்லுநர்களை இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
