செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பதையும் கேட்கவில்லை. என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது. எனக்கு தெரியவில்லை… அவர் வேணும்னு பேசி இருப்பாரா ? என்று தெரியவில்லை…. விளையாட்டாக கூட…. நகைச்சுவைக்கு ஏதாவது சொல்லி இருக்கலாம். ஆனால் பல பேரு மனது காயப்பட்டிருந்தால், அது தவறுதான், வருத்தம் தெரிவித்துக்கொண்டு போய்விடலாம்.
அவர் மனசான்றுக்கு அது தவறு என்று படவில்லை என்றால், மன்னிப்பு கேட்க மறப்பார் தானே…. இதை விட எல்லாம் பெரிய பிரச்சினைகள் இருக்கிறது… பொள்ளாச்சியில் கதற கதற பல பெண்களை கூட்டு வன்கொடுமை செய்தது….. தங்கச்சி ஸ்ரீமதி எப்படி இறந்தார்கள் என்பதை யாருமே கேள்வி எழுப்ப வில்லை.
எட்டு விவசாயிகள் மேலே ஏன் குண்டாஸ் போட்டார்கள் என்று யாருமே கேட்கல ? எவனோ பிரச்சனைகள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது… புகழ்பெற்ற கலைஞர்களுக்கு உடைய பிரச்சினை என்று சொல்லும் போது இது அதீதமான செய்தியாகிறது. எனக்கு சொன்னார்கள்…. அண்ணன் என்ன பேசினார் என்று தெரியாது ? என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியாது… அதை கவனிக்க நேரமில்லை அதனால் அது விரும்பத் தகாத நிகழ்வுகள் தான். இதை கடத்தி விடுங்கள்… தவிர்த்து விடுங்கள் என தெரிவித்தார்.
