இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ள நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் செல்ல நினைப்பவர்கள் ரேஷன் கார்டில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும். இதற்கான வேலைகளை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு எளிதில் முடித்து விடலாம்.

அதற்கு முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு பழைய ரேஷன் கார்டுடன் இணைத்துள்ள உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய செல்போனுக்கு வரும் ஓடிபி எண் பதிவிட வேண்டும்.

இப்போது உங்களது ரேஷன் கார்டில் விவரங்கள் அனைத்தும் அதில் தெரிய வரும். அதில் அட்டைப் பிறழ்வு என்பதை புதிய கோரிக்கைகள் என்பதை அடுத்தடுத்து கிளிக் செய்ய வேண்டும்.

அதில் தோன்றும் புதிய திரையில் உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் ரேஷன் கடையின் குறியீட்டு எண் ஆகியவற்றை சரிபாரத்தை சேவையை தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்ஷனில் குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக ஸ்கிரீனில் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து அதற்கான காரணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இப்போது உங்களுடைய கோரிக்கை ஏற்கப்பட்டு இரண்டு நாட்களில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு  ரேஷன் கார்டில் இருந்து தேர்வு செய்த பெயர்கள் நீக்கம் செய்யப்படும்.