காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.