சட்டப்பேரவையில் டைடல் பூங்கா தொடர்பான விவாதத்தின்போது, பாமக எம்.எல்.ஏ. கணேஷ் மற்றும் துணை சபாநாயகர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்தே தான் பேசுவதாக எம்.எல்.ஏ. கணேஷ் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த துணை சபாநாயகர், கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள அனைத்து விஷயங்களையும் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். மேலும், அவை விதிமுறைகளின்படி தொடர்புடைய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனால் இருவருக்கும் இடையே சிறிது நேரம் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
Tidel park குறித்து பேசி பாமக எம்.எல்.ஏ. கனேஷ்
துணை சபாநாயகர் : subject அ தவிர மத்தத பேசுறிங்க
கனேஷ் : கொள்கை விளக்க குறிப்புல இருக்குறத தான் பேசுறேன்
துணை சபாநாயகர் : அதை எல்லாம் சொல்ல முடியாதுனு தான் book ல கொடுக்குறாங்க
கனேஷ் : சார் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார்
சௌமியா… pic.twitter.com/u9NJj0n1X3
— Manikandan Sankar (@reportermani) August 25, 2026
“>
இந்த விவகாரத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில், பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணியின் எதிர்வினையும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. டைடல் பூங்கா விவாதத்தின்போது ஏற்பட்ட இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
