இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்பட்டு வருவது குறித்து சிஜேபி (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைத்து, அதனை மேம்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் சிறந்த முதலமைச்சராகத் திகழ்ந்தார் என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில துறைகளில் முதலமைச்சர்களின் பணிகள் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கேரள மாநிலத்தில் சுகாதாரத் துறையை சிறப்பாக வழிநடத்தியதற்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டத்தக்கவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் கல்வித் துறையில் மேற்கொண்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்பான பணிகளுக்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அபிஜீத் தீப்கே வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் சிறந்த முதலமைச்சரான இவர்களை மக்கள் நிராகரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
