நடிகை கிருதி சனோன் நடித்த நகை விளம்பரத்தில், அவர் இந்தோ-வெஸ்டர்ன் உடையில் தனது சகோதரருக்கும் செல்ல நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்த விவாதப் புயலைக் கிளப்பியது.
இந்த சர்ச்சைக்குப் பதிலளித்த கிருதி சனோன், “பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்துவோம்? கலாச்சாரமும் பாரம்பரியமும் இதயத்தில் உள்ளனவே தவிர ஆடைகளில் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், ரக்ஷாபந்தன் என்பது அன்பின் பிணைப்பு என்றும், அது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
கிருதியின் கருத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “ஒரு பெண் என்ன அணிகிறாள், என்ன செய்கிறாள் என்பது அவளது சொந்த விருப்பம்” என்று கூறி, பெண்களைக் கேலி செய்வதை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
இதனிடையே, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்’ நிறுவனர் அபிஜீத் திப்கே வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. “பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று இந்தியா இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதர்களை விட வேகமாக ஓடும் ஒரு ரோபோவை சீனா உருவாக்கியுள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"While India is still debating what clothes our women should wear, China has built a robot that runs faster than humans." — Abhijeet Dipke pic.twitter.com/F4Kmx1cDbu — Cockroaches of India (@CJP_for_India) August 25, 2026 “>
சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ ஒன்று, 100 மீட்டர் ஓட்டத்தை 9.39 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் சமூக முன்னுரிமைகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துரைப்பதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
