கடந்த 6 மாதங்களில் உலகின் பல பகுதிகளில் எழுந்த பதற்றங்களை தணிக்கும் பணியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியா–பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து–கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ மற்றும் செர்பியா–கொசோவோ, எகிப்து–எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட மோதல்களை தடுக்க டிரம்ப் நேரடி தலையீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

சமீபத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் தலைவர்கள் இணைந்து, டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளனர். இதன் மூலம் டிரம்பை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முன்பே பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் இந்த கோரிக்கையை வெளியிட்டிருந்தன. அதேபோல், கம்போடியா இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தது. தற்போது உலக அமைதிக்கான முயற்சிகளில் டிரம்பின் பங்கு சர்வதேச அளவில் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.