தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதில் அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதே தங்களின் முதன்மையான இலக்கு” என்று குறிப்பிட்டார். கட்சியின் கொள்கைகளில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேடையில் பேசினார்.

தற்போது நிலவி வரும் கூட்டணி குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த அவர், கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் உரிய அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.

அதேசமயம், தற்போது கூட்டணி தொடர்பாக எந்தவொரு கட்சியிடமும் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த “ஆட்சியில் பங்கு” என்ற அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.