சமீபத்தில் ஒரு பொது மேடையில் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்றில் இடம்பெற்ற “உங்க அப்பாவை காணோம்” என்ற வசனம், இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, விஜய்யின் இந்தக் கருத்துக்கு எதிராகக் காரசாரமான பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒருவர் தன் அப்பாவைத் தேட வேண்டும் என்றால், அந்தத் தந்தை பிள்ளைகளிடம் ஒரு நல்ல பிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, குடும்பப் பொறுப்புகளை உணராமல் பொறுப்பில்லாமல் திரிந்தால், அந்தப் பிள்ளைகள் அவரைத் தேடவோ அல்லது மதிக்கவோ மாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்து, விஜய் கூறிய உருவகத்திற்கு எதிரான வலுவான வாதமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்துப் பகிரப்பட்டுள்ள பதிவில், ‘பதிவுக்கும் படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் இது நெட்டிசன்களிடையே அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது.
” அப்பாவைக் காணோம்! ”
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
– முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து…
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) June 23, 2026
“>
விஜய் ஆதரவாளர்களும், இடும்பாவனம் கார்த்தியின் கருத்தை ஆதரிப்பவர்களும் மாறி மாறி கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், இணையத்தில் இந்த விவாதம் வைரலாகி வருகிறது.
