அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்கள் முதல்வர் விஜய்யின் சட்டமன்றச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

“நாளைய தீர்ப்பு படம் தொடங்கி இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வர் ஆனது வரை விஜய்யின் நடிப்பு நன்றாக வளர்ந்துள்ளது; ஆனால், சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசுவது, விசில் அடிப்பது, குட்டிக்கதை சொல்வது என மக்கள் அவையை ஒரு சூட்டிங் ஸ்பாட் போல மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல” என்று அவர் ஆணித்தரமாகச் சாடியுள்ளார்.

‘5 நிமிஷம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல’ என்று அவையில் பஞ்ச் பேசும் முதல்வர், அதே 5 நிமிடமாவது தமிழ்நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சினைகளான மின்வெட்டு, விவசாயிகளின் துயரங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்தோ அல்லது தேர்தல் வாக்குறுதிகள் பற்றியோ பேச வேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

“>

 

இறுதியாக, மக்கள் முதல்வர் அவர்கள் தியேட்டர் பாணியை விடுத்து, இனிமேலாவது “ரீல்ஸை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வர வேண்டும்” என்று அவர் தனது கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.