சட்டமன்றக் கூட்டத்தில், “உங்க அப்பாவை காணோம்” என்று கூறி தளபதி விஜய் பேசிய குட்டிக்கதை அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற கருத்து ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மகளிர் விடியல் பயணம் போன்ற பெண்களுக்கான இலவச பேருந்து பயனுள்ள திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நீங்கள் ஸ்டாலினை அரசியல் ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், ஆனால் அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை யாராலும் மாற்றவோ, மக்களின் மனங்களிலிருந்து அழிக்கவோ முடியாது; உங்கள் தாத்தாவே வந்தாலும் இந்தத் திட்டங்களை நிறுத்த முடியாது” என்ற அழுத்தமான வரிகளுடன் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
உதயநிதியின் அப்பா கொண்டு வந்த திட்டங்களை…
உன் தாத்தா வந்தாலும் நிறுத்த முடியாது ! 🔥#DMK #DravidianModel #TVKVijayFails
— 𝕀мρєяƒє¢т (@tis_Imperfect) June 23, 2026
“>
தற்போது இந்தப் பதிவு இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
