தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுகம் தொகுதியை தற்போது திமுக கைப்பற்றியுள்ளது. சென்னையில் உள்ள பல தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் வசமான நிலையில் ஒரு தொகுதி திமுகவின் வசம் ஆகியுள்ளது.

துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் தேர்தல் சமயத்தில் கூட இருவருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனைகள் நடந்தது. பாதுகாப்புக்காக தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் போலீஸ் உதவியை நாடியது கூட குறிப்பிடத்தக்கது. மேலும் பல கட்ட பிரச்சனைகள் மற்றும் சவால்களைத் தாண்டி தற்போதைய திமுக கட்சியின் வேட்பாளர் சேகர் பாபு துறைமுகம் தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.