தமிழகத்தில் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி பல்வேறு சேவை செய்து வந்த விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருக்கிறார். இவர் தன்னுடைய மக்கள் மன்றத்தில் பணியாற்றிய பலருக்கும் தன்னுடைய கட்சியில் வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில் சரத்குமார் என்பவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து தற்போது அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் 2 வருடங்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் மேட்ச் நடைபெறும் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது குடும்பத்துடன் மேட்ச் பார்க்க சென்ற போது தன்னுடைய குழந்தைக்கு கொடுப்பதற்காக மாத்திரையை தான் அவ்வாறு பௌடர் செய்து கொடுத்ததாகவும் அவ்வளவு பெரிய ஐபிஎல் மேட்ச் நடக்கும் இடத்தில் எப்படி போதை பொருள் பயன்படுத்த முடியும் என்றும் கூறிய நிலையில் இது போன்ற தவறான தகவல்களை தேவையில்லாமல் பரப்பாதீர்கள் என்று தன்னுடைய குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த வீடியோ தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
