பிரபல கேவிஎன் நிறுவனர் வெங்கடநாராயணா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். ஆனால் பல காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் சட்ட விரோதமாக முழு படமும் இணையத்தில் லீக்காணதால் பட குழுவுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு அரசு பதவி வழங்கிய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணாவை, அமைச்சர் பதவிக்கு நிகரான தகுதியுடைய ‘தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி’ ஆக நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. டெல்லியில் தமிழக அரசு சார்ந்த முக்கிய விவகாரங்களை முன்னெடுத்துச் செல்லவும், மத்திய அரசுடனான உறவுகளை ஒருங்கிணைக்கவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட கே.வெங்கட நாராயணாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. டெல்லியில் தமிழகத்தின் குரலாய் ஒலித்து, மாநில நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த இவர் முழு பங்களிப்பை வழங்குவார் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.