சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு அபார வெற்றி பெற்றுள்ளார்.

80,838 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிக் கனியைப் பறித்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 72,303 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ஆனால், இந்தத் தொகுதியின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெறும் 5,124 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்துள்ளார்.

தவெக வேட்பாளர் பாபுவின் இந்த மாபெரும் வெற்றி, காரைக்குடி அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சீமானின் இந்தத் தோல்வி நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் காரைக்குடி முழுவதும் பட்டாசு வெடித்து இந்த வரலாற்று வெற்றியை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.