
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது இறப்புக்கு பிறகு வருகிற 5ம் தேதி கிடைத்திறன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிற்கிறார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் தனது கூட்டணி கட்சியினருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெரியாரை வழித்தோன்றலுக்கான திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைந்ததால் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் 2026ம் ஆண்டிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எனவே வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வெற்றியை இந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் 200 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்று பெண்கள் கூறுகின்றனர். இதுவரை நாங்கள் 9 வார்டுகளில் மக்களை சந்தித்துள்ளோம் ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நினைத்து விட்டு சென்றார்களோ, அதை அனைத்தும் நிறைவேறும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்று தனிப்பட்ட எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.