தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 1000 ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அதிமுக தேர்தல் காலம் என்பதால் 2500 ரூபாய் கொடுத்தீர்கள் எங்களுக்கு இன்னும் தேர்தல் வரவில்லை வந்தால் பணம் வருவது குறித்து பார்க்கலாம் என்று கூறினார்.

தேர்தலுக்காக தான் பொங்கல் பரிசு கொடுக்கிறோம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனக்கு திமுக ஆட்சி மீது கோபம் உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். 1000ரூபாய் தராதது பற்றி துரைமுருகன் கூறியதை ஏற்க முடியாது என்றும், ஆளும் கட்சியின் மீது சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்ற அவர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.