கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  விதிகளை மீறி லாரி, டிராக்டர் போன்ற சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோல் போன்ற சரக்குகளை ஏற்றிகொண்டு வருவதாக  புகார்கள் வருகிறது. சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிக உயரத்தில் வைகோல்  ஏற்றி சென்ற லாரி ஒன்றும், சரக்கு வேணும் மின் கம்பியில் உரசி தீ பற்றி எரிந்தது. இதில் இரண்டு வாகனங்களும் இருந்து சேதமாகியுள்ளது.

அதிக பாரம் மற்றும் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனத்தின் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.