புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.