தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். அதாவது திருப்புவனம் பகுதியில் அஜித்குமார் என்பவரை நகை திருட்டு வழக்கில் கைது செய்து அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அஜித் குமார் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நேற்று தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் போராட்ட இடத்திற்கு வர தொடங்கியுள்ளனர்.
அப்போது அவர்கள் கையில் வைத்துள்ள பதாகைகள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சாரி வேண்டாம் நீதி தான் வேண்டும். பொய் மன்னிப்பு போதாது. உயிரின் மதிப்பு தெரியுமா. மன்னராட்சி புரியுமா போன்ற பதாகைகளை வைத்துள்ளனர்.
மேலும் முன்னதாக அஜித்குமார் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரின் தாயாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சாரி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
