திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 50 ஆண்டுகாலமாக எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் காட்பாடி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெறுவார்.
ஆனால் துரைமுருகனுக்கு வயதாகி விட்டதால் தற்போது கட்சிப் பணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் அல்லது எம்பி திருச்சி சிவா ஆகியோரில் ஒருவரை திமுக பொதுச்செயலாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
ஆனால் துரைமுருகன் கட்சிப் பதவி முக்கியமில்லை காட்பாடி பகுதியில் மட்டும் சீட்டு கொடுத்தால் போதும் என்று கூறுகிறாராம். காட்பாடி தொகுதி மக்கள் தான் என்னுடைய தெய்வம் என்று கூறும் துரைமுருகன் சமீப காலமாக அந்த தொகுதியில் முகாமிட்டு மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து வருவதோடு உறுப்பினர் சேர்க்கை பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு வருகிறார்.
