சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு சந்தேகம் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். க்ஷ இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் விஜய் தலைமையில் முதல்முறையாக அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் போலீசார் 16 நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பிய தொண்டர்களை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து கிளம்பிய தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளது தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.