தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சலா மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அஞ்சலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.