நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனர் ஹஸன் இப்ராஹிம் போன்றோர் அறிவுறுத்தலின் பெயரில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

மேலும் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு, கால்நடை ஆய்வாளர் செல்வி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மலடு நீக்கம், பெரியம்மை, சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.