வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி தரவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசானது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி  வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

தற்போது பள்ளி கல்வித்துறை இந்த திட்டத்திற்கான புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளியில் இருந்தால் அந்த மாணவருக்கு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் , இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அதிகளவு தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவது கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.