தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 2.90 லட்சமானவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.