கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய இந்துமதி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இந்துமதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக சாணி பவுடரை எடுத்து குழந்தை தின்றதாக தெரிகிறது.

இதனால் மயங்கி விழுந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.