விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொங்கன்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே சில வாலிபர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளியின் முன்பு போட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகிருஷ்ணா கொங்கன்குளத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரை கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மாரிச்சாமி ஜெயகிருஷ்ணாவை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயா கிருஷ்ணா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரிச்சாமியை கைது செய்தனர்.