விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டாண்ட் தி பாபு உத்தரவின்படி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது விருதுநகர் மெயின் பஜாரில் 14 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 28 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைக்காரர்களிடமிருந்து 17,500 அபரதம் வசூலித்தனர்.