மதுரை மாவட்டத்திலுள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவில் கேசவன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கேசவன் தாதம்பட்டி மந்தையில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கேசவன் உதவி கேட்டுள்ளார். அவர் பணம் எடுப்பது போல நடித்து பணம் வரவில்லை என கூறி கேசவனிடம் வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

சிறிது நேரத்தில் கேசவனின் வங்கி கணக்கிலிருந்து 34 ஆயிரத்து 451 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.