நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலை ஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்காரன் இருப்பு வரை செல்லும் சாலை அமைந்துள்ளது. தலை ஞாயிறு ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் போன்றவைகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் ஜல்லி  கற்கள் கொட்டப்பட்டுள்ளது.

ஆனால் தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன் காரணமாக  உடனடியாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த தார் சாலையை விரைவில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.