முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய அம்சத்தை அந்த வங்கியின் imobile pay செயலி மூலமாக NRI வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.