உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே இருளில் மூழ்கியுள்ளது. அதேபோல உக்ரைனின் பாக்முத் நகரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். மேலும் இதன் காரணமாக அந்நகரில் வெறும் ஐந்து மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்குள்ள  மக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் இந்த ஐந்து பேர் மட்டுமே ஓடி சென்று உதவி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.