மகாராஷ்டிரா மாநிலம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் சஞ்சய் கெய்க்வாட். சமீப காலமாகவே இவர் சில சர்ச்சைக்குரிய செய்திகளின் தலைப்பில் இடம் பிடித்திருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக மும்பையில் உள்ள ஒரு கேண்டினில் உணவு ஊழியர் ஒருவரை சஞ்சய் கெய்வார்ட் தாக்கியது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியது.

இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சைக்குப் பிறகு உணவு மற்றும் மருந்து நிர்வாக குழுவினர் அந்த கேண்டினில் உள்ள உணவின் தரத்தை ஆய்வு செய்து அந்த கேண்டின் உரிமையாளரின் உணவு விற்பனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இதனை சிறிதும் உணராத சஞ்சய் கெய்வாட்ர் இதுபோன்ற செயலை யாரேனும் மீண்டும் செய்தால் நான் மீண்டும் அவர்களை அடிப்பேன். நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் ; அதனை மீண்டும் செய்ய தயங்கவும் மாட்டேன் என எச்சரித்துள்ளார். நிர்வாகம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது நடவடிக்கையில் தாமதத்தை ஏற்படுகிறது.

ஷெட்டி என்ற ஒப்பந்ததாரருக்கு கேண்டின் நடத்துதுவதற்கான ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு மராத்திய மாநில  நபரிடம் கொடுங்கள்; நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பது அவர்களுக்கு தான் தெரியும். தென்னிந்தியர்கள் நடனப் பார்கள் மற்றும் பெண்களை வைத்து‌ பார்கள் நடத்துவதால் மகாராஷ்டிரா கலாச்சாரம் கெட்டுப் போகிறது.

அவர்கள் நம் குழந்தைகளின் வாழ்கையே சீரழித்து விட்டார்கள். இதுவே கேன்டீன் ஊழியர் ஒரு மராட்டியாக இருந்திருந்தால் அவரை என்ன செய்திருப்பீர்கள் என அவரிடம் ஒரு நபர் கேள்வி கேட்டபோது, இது மராத்திகளைப் பற்றிய கேள்வி அல்ல; முதலாவதாக மராத்திகள் இப்படிப்பட்ட  தவறை செய்திருக்க மாட்டார்கள்.

மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் நடன பார் அல்லது பெண்களை வைத்து பார் நடத்துவதில்லை. அவர்கள் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் செய்ததில்லை; வெளியாட்கள் மட்டுமே இது போன்ற செயல்களை செய்கிறார்கள். இவர் இதற்குமுன்பு புல்தானாவில் 2 முறை எம்.எல்.ஏ- வாக இருந்தார் எனவும், இவருக்கு சர்ச்சைகள் புதியதில்லை எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து‌ இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு மேடையில் பேசிய சஞ்சய் கெய்வார்ட் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 11 லட்சம் பரிசாக வழங்குவேன் என கூறியபோதும் சர்ச்சையில்  சிக்கினார். மேலும் தன்னுடைய சொந்த காருக்குள் வாந்தி எடுத்த இவர் அதனை ஒரு போலீஸ்காரரை வைத்து சுத்தம் செய்வது போன்ற ஒரு வீடியோ வெளியாகிய போது சர்ச்சையில் சிக்கினார்.

இவை எல்லாவற்றுக்கும் முன்பு 1987 ஆம் ஆண்டு காட்டில் ஒரு புலியை வேட்டையாடியதற்காகவும், அதன் பல்லை தனது கழுத்தில் மாலையாக அணித்திருப்பதாகவும் சஞ்சய் கெய்வார்ட் கூறிய போதும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.