அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தகாத உறவில் இருந்ததால் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தையை அப்பெண்ணின் தாயாரும், அந்த இளம் பெண்ணும் சேர்ந்து விற்க முயற்சிகள் செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை நலக்குழுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி குழந்தைகள் நலக்குழு அப்பெண்ணிடமும் அவரது தாயாரிடமும் அவ்வாறு செய்வது தவறு, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்திவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் இருவரும் சேர்ந்து வீடு திரும்புவதற்கு முன்னரே குழந்தையை ரூபாய் 50 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அப்பெண்ணின் மீதும், அவரது தாயார் மற்றும் குழந்தையை விற்க உதவிய பெண் ஊழியர் ஆஷா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் குழந்தையை வாங்கிய நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.