இணையத்தில் தற்போது ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு சுயவிவரம் வைரலாக பரவி வருகிறது. பாரம்பரிய பாணியை முற்றிலும் மீறி, பாதி மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்ட அந்த சுயவிவரம், நெட்டிசன்களிடையே சிரிப்பையும், சிந்தனையையும் உருவாக்கியுள்ளது.
அந்த சுயவிவரம்(RESUME) வேடிக்கையாகவும், தைரியமாகவும் எழுதப்பட்ட வாசகம் ஒன்று அனைவரையும் கவர்ந்தது – “எனது முழுத் திறமையைப் பெற, எனக்கு வேலை கொடுங்கள்0!” என்று எழுதப்பட்டிருந்தது.
மேல்பகுதியில் வேலைக்கான குறிக்கோள், முகபகுதி, பெயர் போன்றவற்றுடன் தொடங்கிய சுயவிவரம், நடுப்பகுதியில் வந்தவுடன் முடிந்து போனது. அனுபவம், தகுதி, தொடர்பு விவரங்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த சுயவிவரம் இணையத்தில் பரவியவுடன் பலரும் இது ஒரு meme-க்காக உருவாக்கப்பட்டதாகவும், சிலர் இது ஒரு புத்திசாலியான யுக்தி எனவும் கருத்து தெரிவித்தனர்.
“இப்படி வேற லெவலில் கவனத்தை ஈர்க்குறது நல்ல யோசனைதான்… ஆனா contact info இல்லையா? எப்படி வேலைக்கு அழைப்பாங்க?” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “உண்மையா? Photoshop effect மாதிரி தெரிகுது” என சிலர் சந்தேகமும் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்பு சந்தையில் புதியதொரு பார்வையை இந்த சுயவிவரம் ஏற்படுத்தியுள்ளது. சில சமயங்களில் சாதாரணமான பார்வையை மாற்றும் விதமாக, சற்றே வேறுபட்ட அணுகுமுறை கூட வாய்ப்பை உருவாக்கி விடும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது
