சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இந்த சேலம் மாநாட்டுக்கு இன்னொரு பொறுப்பு இருக்கிறது… பெருமை இருக்கு…. மற்ற இயக்கங்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்துவாங்க…  எந்த அணிக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டாங்க. அந்த இயக்கமே நடத்தும்…  ஆனால் முதல் முறையாக நம்முடைய தலைவர் அவர்கள் இளைஞர் அணி மீது….

உங்கள் மீது இருக்கக்கூடிய அந்த நம்பிக்கையால் இளைஞர் அணிக்கு அந்த மாநாட்டை நடத்தக்கூடிய பொறுப்பு கொடுத்திருக்காங்க…. அந்த அளவுக்கு தலைவர் அவர்கள் உங்கள் மீது எதிர்பார்ப்போடு இருக்கிறாங்க… அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்விங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு….  இந்த இடத்தில் ஒரே ஒரு சின்ன உவமை  மட்டும் சொல்லிடுறேன்.

பூட்டப்பட்ட ஒரு பூட்டு, ஒரு சாவி, பக்கத்துல ஒரு சுத்தியல். இந்தப் பூட்டை திறப்பதற்கு சுத்தியல் எவ்வளவோ முயற்சி பண்ணுது.  பூட்டோட தலையில ஓங்கி ஓங்கி அடிக்குது…  அடிச்சா பூட்டு திறந்துவிடுமுன்னு… ஆனா பூட்டு திறக்கவே இல்ல. இந்த சாவி என்ன பண்ணுச்சு ? ரொம்ப சுலபமா பூட்டை திறந்திருச்சு…  இந்த சுத்தியல் சாவியை பார்த்து கேட்டுச்சு…. எப்பா நான் உன்னோட எவ்வளவு பெருசா இருக்கேன்…. வலிமையா இருக்கேன்…

நான் எவ்வளவோ முயற்சித்தேன்… ஆனால்  என்னால பூட்டை  தொறக்கவே முடியவில்லை… நீ மட்டும் எப்படி இவ்வளவு சுலபமா இந்த பூட்ட தொறந்த அப்படின்னு கேட்டுச்சு…..  சாவி சொல்லிச்சி…. ஆமா நான் உன்ன விட பலசாலி கிடையாது. உருவத்திலும் சரி,  அளவிலும் சரி… நான்  உன்னை விட ரொம்ப சின்னவன் தான்…  ஆனால் நான் பூட்டோட இதயத்தை போய் தொடுகிறேன்,  அதனால தான் பூட்டு திறக்குது….

நான் பூட்டோட இதயத்தை போய் தொடுறேன். அதனால தான் பூட்டு திறக்குது. நீ பூட்டை  தொறக்கறதுக்கு,  பூட்டோட தலையிலேயே அடிக்கிற…. ஆனால் நீ தலையில அடிச்சேனா பூட்டு திறக்காது, அப்படின்னு அந்த சாவி சொல்லிச்சி. நான் இந்த இடத்துல பூட்டுன்னு சொன்னது, நம்முடைய தாய் தமிழ்நாடு, நம்முடைய மாநிலம், தமிழ்நாடு,  தமிழ் மக்கள்…. சுத்தியல்ன்னு சொன்னது, ஒன்றிய பாஜக அரசு.

சாவின்னு சொன்னது, நம்முடைய தலைவர் அவர்கள் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம். ஒன்றிய பாஜக எவ்வளவு தான் தமிழ்நாட்டோட தலையை அடிச்சி, தமிழ்நாட்டுக்குள் நுழைய முயற்சித்தாலோ, நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் அந்த சாவியை, நம்முடைய தலைவர் கையில தான் கொடுத்து வச்சிருக்காங்க….  நம்முடைய தலைவருக்கு தான் தெரியும், தமிழ்நாட்டு மக்களை எப்படி மகிழ்ச்சியோடு வச்சிருக்கணும் அப்படின்னு. அதுமட்டுமல்ல தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க என தெரிவித்தார்.