திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், கலைஞர் அவர்கள் 100 இல்லை… அது  எங்கிருந்து தொடங்கியது என்றால்,  அண்ணா அவர்கள் தமிழ் மாநாடு நடத்தி…  கடற்கரையில் எல்லாருக்கும் சிலை  வைக்கிறார்.  அப்ப குன்றக்குடி அடிகளார் ரொம்ப நெருக்கம். குன்றுக்குடி அடிகளார் சாமியாரிடம் எனக்கு என்ன பிடிக்கும் என்றால்,  சனாதான ஒழிப்பை பேசிவிட்டு,  மறுநாள் கும்பாபிஷேகத்துக்கு போகிற சேகர்பாபு அவர்கள் இருக்கின்றார் அல்லவா…

அதை  கண்டு தானே பிஜேபி குழப்பம் அடைகிறான். அவனுக்கு  இருக்கும் குழப்பம் ஒன்று தான். சனாதன எதிர்ப்பா ? இல்ல கும்பாபிஷேகமா ? இது வேற….  அது வேற என இவனுக்கு புரியாது….  ஆன்மீகம் என்பது வேற,  சனாதானம் என்பது வேற… சனாதனம் ஆன்மீகமா ? சனாதனம் சாமி கும்பிடுவதா ? சாமி கும்பிடுவதை மறுப்பதா ? இல்லை அது நாத்திகம்…. அது பெரியார் பேசியது….

சனாதனம் என்பது மனிதன் ஒருவனுக்கு ஒருவன் இணையானவன் இல்லை,  ஒருத்தன் தலையில் பிறந்தவன், ஒருத்தன்  காலில் பிறந்தவன்,  ஒருத்தன் மேலே உட்கரு, ஒருத்த  கீழே உட்காரு என்று சொல்வது தான் சனாதனம். இங்கு எல்லாருக்கும் எல்லாம் என இருப்பது சனாதனம் இல்லை. ஆஸ்திரேலிய வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி வைத்திருந்தார்.

நம்ம தேச பக்க்தர்கள் பூராம் உலக கோப்பை மீது கால் வைப்பதா ? என  கொந்தளிச்சுட்டார்கள். டேய்… அவன் ஜெயிச்சவன்… அது மேல எதையும் தூக்கி வைப்பான். இதெல்லாம் என்ன பேச்சு ? அது ஒரு ஆட்டம்… அந்த ஆட்டத்தை அவன் நல்லா ஆடினான் ஜெய்ச்சான்.நம்ம நல்லா ஆடி இருந்தா நாம ஜெயிச்சு இருப்போம்… நம்ம ஜெயிக்க விரும்பினோம்…

அனால் அவன் நல்ல ஆடினான் ஜெயிச்சுகிட்டான். ஜெயித்தவன் காலை எங்கேயும் தூக்கி வைப்பான். இன்னொன்று ஒரு சாதாரண உலக கோப்பைக்கு மேல கால தூக்கி வைப்பதற்கு இந்த கத்து கத்துறீயே… ரொம்ப நாள் என்னை காலில் பிறந்தவன் என்று  என்று சொல்லிக் கொண்டே இருந்தாய்… நீ மனிதன் அல்ல…. ஒருத்தன் தலையில் பிறந்தவன், ஒருத்தன் நெஞ்சுல  பிறந்தவன், மனிதன் காலில் பிறக்கலாமா?  ?  ஆனால் உலக கோப்பை மேல் கால் வைக்கக்கூடாதாம்…. இது தான் சனாதனம்..

எது தேவையில்லையோ…. போற்றப்பட கூடாதோ….  எதை நாம் கொண்டாட வேண்டியது இல்லையோ, அவையெல்லாம் கொண்டாடி எதை மதிக்கணுமோ…. அவனை மதிக்காமல் கீழே தள்ளுகிறான்… மனிதனை,  அதுதான்  சனாதானாம். திராவிடம் என்ன சொல்கிறது என்றால்,  அது ஒரு கோப்பை…. கையில் இருந்தால் கோப்பை….  காலடியில் வைத்தால் கால்மிதி,  ஒன்றும் விஷயமில்லை…  மனிதனை   எப்படி நடத்துகிறார்கள் என்று பார் என்று செய்வது திராவிடம் என தெரிவித்தார்.