பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சபிதா ஜோசப் அளித்துள்ள ஒரு பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதாவது கயல் ஆனந்தி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுகள் வர தொடங்கியது. இந்த விஷயம் சைந்தவியை மிகவும் பாதித்திருக்கலாம். மேலும் அதனால் தான் அவர்கள் விவாகரத்து செய்து இருக்கலாம் என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
