பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகக் வலம் வந்து, தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களிலும் தனது கால் தடத்தைப் பதித்து வரும் பிரபல நடிகை ஜான்வி கபூர், அண்மையில் தனது சகோதரி குஷி கபூருடன் இணைந்து கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின் எப்போதும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியதுமான ‘ரேபிட் பயர்’ சுற்று நடைபெற்றபோது, தொகுப்பாளர் கரண் ஜோஹர் நடிகை ஜான்விடம் பல சுவாரசியமான தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு அசத்தினார். குறிப்பாக, இதுவரை உங்களுக்கு வந்த குறுஞ்செய்திகளிலேயே மிகவும் ஃபிளர்ட்டியான மற்றும் அதிர்ச்சியான மெசேஜ் எது என்று அவர் கேள்வி எழுப்பினார்

இதற்குச் சற்று தயங்கியபடியும், அருகில் அமர்ந்திருந்த தனது சகோதரி குஷியைப் பார்த்தும் சிரித்தபடியே ஜான்வி கபூர் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தமக்கு அனுப்பிய மெசேஜை மேடையில் உடைத்த அவர், “உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?” என்று அந்த நடிகர் மிகவும் நெருக்கமாகவும் கிண்டலாகவும் தனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிவித்தார். ஜான்வியின் இந்த எதிர்பாராத மற்றும் துணிச்சலான பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் ஒரு கணத்திற்கு அதிர்ச்சியடைந்தனர்.

இதனைக் கேட்ட தொகுப்பாளர் கரண் ஜோஹர் தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வியப்புடன் அப்படியா என்று விசாரித்ததுடன், உங்களுக்கு அவ்வளவு மச்சங்கள் இருக்கிறதா என்றும் கலகலப்பாகக் கிண்டல் செய்தார். அதற்கு வெட்கப்பட்டபடியே ஆமாம் எனக்கு நிறையவே உள்ளன என்று ஜான்வி பதிலளித்த விதம் அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது. எனினும், அந்தத் தில்லாலங்கடி மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்ற பெயிட்டை ஜான்வி கடைசி வரை வெளியிடவில்லை என்பதால், அந்த மர்ம நபர் யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்துத் தேடி வருகின்றனர்