பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் கரீனா கபூர் சைப் அலிகான். ஏற்கனவே சைப் அலிகானுக்கு திருமணம் ஆகி சாரா அலிகான் என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் சாரா தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து நடிகர் சைப் அலிகான் இரண்டாவதாக கரீனா கபூரை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சைப் அலிகான் கரீனா கபூர் பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி இருந்த நிலையில் தற்போது அதை அழித்து திரிசூல டாட்டூவாக மாற்றியுள்ளார். இதனால் தற்போது கரீனா மற்றும் சைப் அலிகான் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போகிறார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

