திரையுலகில் தற்பொழுது த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவாளராக வலம் வரும் பிரபல நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், செய்தியாளர்கள் சந்திப்பில் த.வெ.க-வின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் அவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் பேசும் போது, “புதிதாக ஒரு இடத்திற்குச் செல்லும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் கத்தும், அதற்குப் பிடித்த மாதிரி பிஸ்கட்டோ அல்லது பிரியாணியோ போட வேண்டும்” என்று மக்களைத் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய உதாரணம் தற்பொழுது கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

லாரன்ஸின் இந்த சர்ச்சைப் பேச்சுக்குத் த.வெ.க-வின் மற்றொரு தீவிர ஆதரவாளரும் பிரபல சின்னத்திரை நட்சத்திரமுமான தாடி பாலாஜி செம காரசாரமாக ஒரு வீடியோ வெளியிட்டுத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள தாடி பாலாஜி, பல ஏழைகளுக்கு உதவி செய்து ஆன்மீகவாதியாக இருக்கும் லாரன்ஸ் மாஸ்டர், பொதுவெளியில் மக்களை எப்படி நாய் என்று சொல்லலாம் என்றும், இதெல்லாம் ஒரு வார்த்தையா மாஸ்டர்? என்று மிகக் கறாராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் தேர்தல் வரவில்லை, உங்களை அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள் நீங்கள் பயன்படுத்திய இந்த தவறான வார்த்தை உங்களை நம்பிப் பின்னால் நிற்கும் கட்சித் தலைவரையும் த.வெ.க கட்சியையும் நேரடியாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ள பாலாஜி, லாரன்ஸ் பேசிய இந்தத் தவறான வார்த்தைக்காக உடனடியாக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக வலியுறுத்தியுள்ளார்.

த.வெ.க ஆதரவாளர்களான லாரன்ஸ் மற்றும் தாடி பாலாஜிக்கு இடையே வெடித்துள்ள இந்த உள்விவகார மோதல், தற்பொழுது சோசியல் மீடியாக்களில் பயங்கர விவாதப் பொருளாக மாறி இணையத்தை அடியோடு அதிர வைத்து வருகிறது.