சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி. ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திரையுலகில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக திட்டிக் கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

அதோடு எந்த பிரச்சினைகள் மற்றும் விவாதங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் அதிகமாக திட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் உத்தம வில்லன் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் இன் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தின் புகார் கொடுத்த நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.