சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் அவரை மீண்டும் எங்க கூட்டணிக்கு கொண்டுவர டெல்லியில் உள்ள பாஜக தலைவர் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் ஓ.பன்னீர்செல்வம் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறினார். அப்போது அமைச்சர் செந்தமிழன் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
