சிலர் கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் ஆபத்தில் தானாக சென்று சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் ஊர்ந்து சென்ற மலைப் பாம்பை ஒருவர் கையில் பிடித்து கெத்து காட்டி உள்ளார். அந்த மலைப்பாம்பு அவரது கையை சுற்றி இருந்தது.
அதனை எடுத்து சாக்குப்பையில் போடும்போது மலைப்பாம்பு அந்த நபரின் கையை கவ்வியது. நீண்ட நேரமாக பாம்பு கையை விடவில்லை. ஒரு வழியாக போராடி அவரை மீட்டு பேரணாம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#SunNews | #Vellore | #Python pic.twitter.com/oDdn0YSNq4
— Sun News (@sunnewstamil) August 4, 2025
