தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.1,119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.16,000 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆலை திறப்பு விழாவில் முதலமைச்சரும் மு க ஸ்டாலின் பேசியதாவது வியட்நாம் நாட்டைச் சேர்ந்த VinFast நாளைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்புதான்.

இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடு தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த EV உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.