ஜம்மு காஷ்மீரில் 1931 ல் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக 22 காஷ்மீரிகள் போராடினர். அவர்கள் ஜூலை 13 அன்று பிரிட்டிஷ்கரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த தினம் 2019 ல் பொது விடுமுறை தின பட்டியில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தியாகிகள் தினத்தின் அன்று தியாகிகளின் கல்லறைக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் மத்திய படையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதல்வர் உமர் அப்துல்லா கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அதாவது “ஜூலை 13 தியாகிகள் தினத்தன்று அரசியல் தலைவர்கள் சட்ட உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்… இதனை நான் கண்டிக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் போராடினர். அவர்கள் இன்று வில்லன்களாக பார்க்கப்படுவது பெரிய வெட்கக்கேடு” என்று குற்றம் சாட்டினார்.
அதோடு ”தியாகிகளின் கல்லறைகளுக்கு செல்ல விடாமல் தடுத்தாலும் அவர்களின் தியாகங்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று கூறினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
