
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் கேட்கிறேன்… பாசிசம் என்பது என்ன ? தன் கொள்கையை, கருத்தை அடுத்தவர் மீது பலவந்தமாக திணிப்பதற்கு பெயர் பாசிசம். அப்படி தமிழ்நாட்டில் இரண்டு அமைப்பு இருக்கு. ஒன்னு கம்யூனிஸ்ட்கள், இன்னொன்னு கழகங்கள். உனக்கு சாமி நம்பிக்கை இல்லை, கோவிலுக்கு போகல. யாரும் நிர்பந்தப்படுத்தல.
ஆனால் அந்த கோவில் வாசல்ல கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புறவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன் என்று எழுதுவது பாசிசமா இல்லையா ? ஆகவே பாசிசத்தை விரட்டணும்னா…. கழகங்களை தமிழ்நாட்டில் அடியோடு அழிக்கணும். அப்பதான் பாசிசம் போகும். நம்பர் ஒன் பாசிஸ்ட் மு.க ஸ்டாலின். இவர் ஒரு நேத்துனால பேசுறாருன்னு நினைக்கிறேன். மக்கள் இப்பொழுது விழிப்படைந்து இருக்கிறார்கள்.
இட்ஸ் நாட் 67 நீங்க திராவிட இயக்கங்கள் மக்களை அவ்வளவு சுலபமா ஏமாத்திட்டு போறதுக்கு…. ஆகவே இந்த பாராளுமன்றத் தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல்… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் இவர் கேட்கிறார்…. தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணி இருக்கீங்கான்னுன்னு ? நீங்க எல்லாம் பள்ளிக்கூட குழந்தை மாதிரியே கருப்பு பலூன் விட்டு விளையாடுனீங்கல்ல, கோ பேக் மோடி என எதுக்காக விளையாடுனீங்க ? தமிழ்நாட்டுல டிபன்ஸ் காரிடியரை திறக்க மாண்புமிகு பிரதமர் வந்தாரு.
தமிழர் நலனில் தமிழ்நாட்டு நலனில் திராவிட இயக்கங்கள் அதனுடைய இலவச இணைப்புகள், MDMKயோ அல்லது கம்யூனிஸ்ட்டோ இவங்களுக்கு அக்கறை இருந்திருக்குமானால் நீங்க வந்து கோ பேக் மோடி சொல்லி இருப்பீங்களா ? தமிழர் இன துரோகிகள், விரோதிகள், தமிழ்நாட்டில் எதிரிகள் இந்த திராவிட இயக்கம் திமுகவில் தலைமையில் இருக்கிற அத்தனை கட்சிகளும், இன்க்ளூடிங் காங்கிரஸ்… ஆகவே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியின் விரோதிகள், எதிரிகள் என விமர்சனம் செய்தார்.