பேரிடர் நிதியை விடுவிக்காத பாஜக அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகாவில் கடும் வறட்சியால் 48 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பொய்த்துப் போனதால் 38 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 4663 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூறினார். கடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் வறட்சி காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.